நடப்புக் கடமையில், இரண்டு விண்கலங்கள் செய்முறை கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டது இதுவே முதல்முறை. இதனால், முழு உலகிலும், தானியக்க மற்றும் செய்முறைக் கட்டுப்பாட்டில் விண்கலங்களை இணைக்கும் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ள 3வது நாடாக சீனா மாறியுள்ளது. சீன விண்வெளி வீரங்கனை ஒருவர் விண்வெளிப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. சமூகம், அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. உலகிலும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தியன்கோங்-1 விண்கலத்தின் கதவைத் திறந்து வைப்பது இதுவே முதல்முறை. 8 மாதங்களுக்கு மேலாக இயங்கியுள்ள தியன்கோங்-1 விண்கலத்திலுள்ள பல்வேறு தொகுதிகளும், இணைந்த விண்கலங்களின் மீதான அதன் கட்டுப்பாட்டுத் திறனும் சோதிக்கப்பட்டுள்ளன. சீன விண்வெளி வீரர்கள் 13 நாட்களாக விண்வெளிப் பயணம் மேற்கொண்டு, சீன விண்வெளிப் பயணத்தின் வரலாற்றில் புதிய பதிவாகியுள்ளனர். விண்வெளியில் அவர்கள் வாழ்க்கை மற்றும் பணி அனுபவங்கள் பலவற்றைச் சேகரித்து, மருத்துவ ஆய்வுகளை அதிகமாக மேற்கொண்டு, நடுத்தர மற்றும் நீண்டகால விண்வெளிப் பயணம் மேற்கொள்வதற்கான அடிப்படையை உருவாக்கியுள்ளனர். இதனால், திட்டப்படி சென்ச்சோ-10 விண்கலம் நிறைவேற்ற வேண்டிய சில கடமைகளை சீனா முன்கூட்டியே நிறைவேற்றியுள்ளது. சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயண இலட்சியத்தின் வளர்ச்சியும் பெருமளவில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
நடப்புக் கடமையில், செய்முறையில் விண்கலங்களை இணைப்பது மிக முக்கியமாகவும் மிகக் கடினமாகவும் உள்ளது. இக்கடமைக்குப் பொறுப்பேற்கும் விண்வெளி வீரர்கள் தரையில் 1500 முறைகளுக்கு மேலாக பயிற்சிகளை மேற்கொண்டனர். அவர்களில் லியூ வாங் இக்கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றும் விகிதம் 100 விழுக்காடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களே முதன்மை என்பது, சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத்தின் வழிகாட்டல் சிந்தனையாகும். விண்வெளி வீரங்கனையின் வாழ்க்கை நிலையை உத்தரவாதம் செய்யும் வகையில், விண்கலம் சீராக்கப்பட்டுள்ளது. பெண்ணின் தேவையை நிறைவு செய்ய, சிறப்பு பயன்பாட்டுப் பொருட்களும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மனிதரை ஏற்றிச் செல்லும் நிலையில் தியன்கோங்-1 விண்கலம் சென்ச்சோ-9 விண்கலத்துடன் இணையும் கடமை வெற்றி பெற்றதன் காரணமாக, சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயண இலட்சியம் ஊக்குவிக்கப்பட்டு, மேலும் அருமையான எதிர்காலத்தை நோக்கி, மேலும் விரைவான வேகத்தில் வளரும்.