சென் சோ-9 விண்கலம் சீனாவின் விண்வெளிப் பயணத் துறையில் பல புதிய பதிவுகளை உருவாக்கியுள்ளது. சீனா பெற்ற இந்த முக்கிய முன்னேற்றம் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல நாடுகளின் நிபுணர்களும் முக்கிய செய்தி ஊடகங்களும் சென் சோ-9 விண்கலம் திட்டமிட்ட கடமையை நிறைவேற்றியுள்ளதை வெகுவாகப் பாராட்டினர்.
சென் சோ-9 விண்கலம் திட்டமிட்ட கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது, விண்வெளிப் பயணத் துறையில் சீனா பெற்றுள்ள முக்கிய காலடியாக திகழ்கின்றது. மேலும் புற அண்டவெளியில் ஆய்வு மேற்கொள்வதற்கு சென் சோ-9 விண்கலம் பதிவு செய்துள்ள வெற்றி இன்றியமையாத அடிப்படையை இட்டுள்ளது. சீன வம்சாவழியைச்சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் ச்சியாவ் லீசுங் அமெரிக்க CNN செய்தி நிறுவனத்தின் இணையத்தில் வெளியிட்ட கட்டுரையில் இதைத் தெரிவித்தார்.
சீன விண்வெளி வீரர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் விண்வெளி கலங்களை வெற்றிகரமாக இணைத்ததை ரஷிய விண்வெளி நிபுணர் இகெல் லிசோவ் சிறப்பாகப் பாராட்டினார்.
சென் சோ-9 விண்கலத்தின் வெற்றி, 2020ம் ஆண்டு விண்வெளி நிலையத்தைக் கட்டியமைக்கும் சீனாவின் இலக்கிற்கு முக்கிய அடிப்படையை இட்டுள்ளது என்று பிரிட்டன் ஒலிபரப்பு நிறுவனம் கூறியது.