ஜுன் திங்கள் இறுதி வரை, மொத்தம் 5 கோடியே 27 இலட்சத்து 60 ஆயிரம் மக்கள் சிங்காய் திபெத் இருப்புப்பாதை மூலம் பயணம் மேற்கொண்டுள்ளனர். பயணியர் போக்குவரத்து அளவு ஆண்டுக்கு சராசரியாக 10.3 விழுக்காடு அதிகரித்து வருகிறது என்று சிங்காய் திபெத் இருப்புப் பாதை கூட்டு நிறுவனம் தெரிவித்தது.
2006ம் ஆண்டு ஜுலை முதல் நாள் போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட இந்த இருப்புப்பாதை உலகில் மிக உயர் இடத்தில் கட்டியமைக்கப்பட்ட மிக நீளமான பீடபூமி இருப்புப்பாதையாகும்.
தொடர்புடைய திட்டப்படி, 12வது ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள் இந்த இருப்புப் பாதையின் நீளம் 5616 கிலோமீட்டராக இருக்கும்.