3000 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்ட இப்பூங்கா, லாசா நகரின் சேங்குவான் பகுதியில் அமைகிறது. அதன் பரப்பளவு 800 ஹெக்டராகும். 3 முதல் 5 வரையான ஆண்டுகாலத்தில் அது கட்டிமுடிக்கப்படும். பண்பாட்டுச் சுற்றுலாவைத் தலைமைத் தொழிலாகக் கொண்ட இந்தப் பூங்கா, நாட்டுப்புற பண்பாட்டுக் கண்காட்சி, தேசிய இனக் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, அரங்கேற்றம் மற்றும் பொழுது போக்கு, சுற்றுலா முதலியவற்றைக் கொண்டிருக்கும் பண்பாட்டுத் தொழில்கள் செறிந்திருக்கும் மண்டலமாக உருவாக்கப்படும்.