சீனத் திபெத்தின் மொட்டோ மாவட்டத்திலுள்ள பத்தாயிரக்கணக்கான மென் பா மற்றும் லோ பா இனத்தவர்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க, திபெத் ராணுவ 115வது மருத்துவமனையைச் சேர்ந்த பணியாளர்கள், 1994ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடந்து அம்மாவட்டத்தைச் சென்றடைந்து மருத்துவச் சேவையை வழங்கியுள்ளனர். கடும் நோய் உடைய சுமார் 600 பேரை மீட்டு, 4000க்கு அதிகமானோருக்கு அறுவைச் சிகிச்சை அளித்து, 20ஆயிரம் பேருக்கு மருத்துவச் சேவையை அவர்கள் வழங்கினர்.
மோட்டோ மாவட்டத்தில் செயல்படும் மருத்துவக் குழுவை நிறுவ, கடந்த 18 ஆண்டுகளாக, மருத்துவமனைச் சிகிச்சைப் பயிற்சி, இலவச மருந்து, மருத்துவ வசதிகள் ஆகியவற்றில், 10 இலட்சக்கணக்கான யுவானை 115வது மருத்துவமனை ஒதுக்கீடு செய்துள்ளது.