உள்ளூர் நேரப்படி ஜூலை 26ஆம் நாள், இலண்டனில் நடைபெற்ற 124வது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முழு அமர்வில், அக்குழுவின் புதிய சுற்று உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புகழ்பெற்ற சீனப் பூப்பந்து விளையாட்டு வீராங்கனை லி லின்வென் 83 ஆதரவு வாக்குகள் மற்றும் 10 எதிர்ப்பு வாக்குகளைப் பெற்று, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினராக வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சீனப் பெருநிலப்பகுதியைச் சேர்ந்த 5வது உறுப்பினர் ஆவார்.
38 வயதான லி லின்வென், உலகப் பூப்பந்துப் போட்டியில், பெண்கள் ஒற்றையர் ஆட்டத்திலும், இரட்டையர் ஆட்டத்திலும் முதலிடம் பெற்றவர் ஆவார்.