சீன அரசவை உறுப்பினர் தாய்பிங்கோ, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் பொதுச் செயலாளர் ஹுச்சிந்தாவ் மற்றும் சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் அளித்த பொறுப்பை ஏற்று, 26ஆம் நாள் லண்டன் ஒலிம்பிக் கிராமத்துக்குச் சென்று, 30வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவினர்களைச் சந்தித்தார்.
சீனப் பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் தாய்பிங்கோ அன்பான வணக்கத்தையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், சீனப் பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், சீன மக்களின் சுயநம்பிக்கை, திறந்த மனம் மற்றும் ஆக்கமுள்ள நல்ல தோற்றத்தை வெளிப்படுத்தி, நல்ல சாதனையைப் பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.