அதே நாள் உலக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக்குஸ் ரோக்கை, லண்டனில் தைய் பிங் கோ சந்தித்துரையாடினார். ஒலிம்பிக் இலட்சியத்தை ஆதரித்து, உலக ஒலிம்பிக் கமிட்டியுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, ஒலிம்பிக் எழுச்சியை வெளிக்கொணர்ந்து, பன்னாட்டு மக்களிடையே நட்புறவைத் தூண்டி, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை நனவாக்க, மேலும் பெரும் பங்காற்ற, சீனா விரும்புகிறது என்று தைய் பிங் கோ தெரிவித்தார்.