இவ்வாண்டின் முற்பாதியில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. அது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 170.3 விழுக்காடு அதிகமாகும். அத்துடன், முழு நாட்டு மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பின் அதிகரிப்பு வேகத்தை விட, இப்பிரதேசத்தின் அதிகரிப்பு வேகம் 162 விழுக்காடு அதிகமாகும். அது நாட்டின் முன்னணியில் இருக்கிறது என்று லாசாவின் சுங்கத் துறை அண்மையில் தெரிவித்தது.
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுடனான இரு தரப்பு வர்த்தகத்தில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஆசிய நாடுகளுடனான மொத்த வர்த்தக மதிப்பு 79 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. அது 148.7 விழுக்காடு அதிகரித்தது.