ஆகஸ்ட் 3ஆம் நாள், லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய 7வது நாளாகும். அன்று மொத்தம் 22 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நீச்சல் போட்டியில் அமெரிக்கா 3 தங்கப் பதக்கங்களைப் பெற்று, மொத்தம் 21 தங்கப் பதக்கங்களோடு 20 தங்கப் பதக்கங்களைப் பெற்ற சீனாவைத் தாண்டி, தங்கப் பதக்க வரிசையில் முதலிடம் வகிக்கிறது. சீன விளையாட்டு வீரர்கள் இன்னமும் நன்றாகச் செயல்பட்டு, 2 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
பூப்பந்து கலப்பு இறுதிப் போட்டி, 2 ஜோடி சீன வீரர்களிடையில் நடைபெற்றது. தலைமை விதை ச்சாங் நான், ச்சாவ் யூன்லெய் ஜோடி 2:0 கணக்கில் சியூ சென், மா ஜின் ஜோடியைத் தோற்கடித்து, தங்கப் பதக்கத்தைப் பெற்றனர்.
பவுண்டிங் பெட் ஆட்டத்தின் இறுதிப் போட்டியில், சீன அணியைச் சேர்ந்த தோங் தோங் தங்கப் பதக்கத்தையும், லூ சுன்லோங் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
தடம் மிதிவண்டி ஆட்டத்தின் இறுதிப் போட்டியில், பிரிட்டிஷ் வீராங்கனை ஃபேன்ட்லேதன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். சீன வீராங்கனை குவ் ஷுவாங் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
ஜோடோ, அம்பு எய்தல், துப்பாக்கிச்சுடுதல் ஆகிய போட்டிகளில் சீன வீரர்கள் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.