சீனத்திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 12வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திலான தேசியச் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் பொதுத் தேவை மற்றும் மின்னாற்றல் வலைப்பின்னலின் பொது வளர்ச்சித் திட்டத்தின் படி, அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. திபெத் மின்னாற்றல் ஒழுங்குமுறை கூட்டு நிறுவனம், பொது மின்னாற்றல் வலைப்பின்னல் விரிவாக்குவது, வேளாண் மின்னாற்றல் வலைப்பின்னல் மாற்றுவது, மேம்படுத்துவது, மின்னாற்றல் இல்லாத பிரதேசங்களில் மின் இணைப்புக் கட்டுமானம் ஆகியவற்றின் மூலம், மின்னாற்றல் வலைப்பின்னலின் பரவுகின்ற பரப்பளவில் 26 மாவட்டங்கள் அதிகரிக்க உள்ளது.
இதை நிறைவேற்றியவுடன், சுமார் 665 ஆயிரத்து 700 மக்களின் மின் பயன்பாட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.