ஆகஸ்ட் 8ஆம் நாள் இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 12வது நாளாகும். அன்று மொத்தமாக 17 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேசைப் பந்து மற்றும் டைக்குவாண்டோ போட்டிகளில், சீனா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது. இதுவரை, 36 தங்கப் பதக்கங்களைக் கொண்டுள்ள சீனா தங்கப் பதக்க வரிசையில் முதலிடத்தைத் தொடர்ந்து வகிக்கின்றது.
8ஆம் நாள் வரை, நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், மொத்தம் 41 பிரதிநிதிக் குழுக்கள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரியா, ரஷியா, பிரான்சு ஆகிய நாடுகள் பதக்க வரிசையில் 2வது முதல் 6வது வரையான இடங்களை வகிக்கின்றன.