ஆகஸ்ட் 9ஆம் நாளன்று இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிவடைய 4 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் மொத்தமாக 22 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. சீன விளையாட்டு வீரர்கள் முறையே ஒரு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். அமெரிக்கப் பிரதிநிதிக் குழு 5 தங்கப் பதக்கங்களைப் பெற்றது. 39 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள அமெரிக்கா மீண்டும் சீனாவைத் தாண்டித் தங்கப் பதக்க வரிசையில் முதலிடத்தை வகிக்கிறது.
9ஆம் நாள் வரை, மொத்தம் 43 பிரதிநிதிக் குழுக்கள் தங்கப் பதக்கங்களை வென்றன. 80 பிரதிநிதிக் குழுக்கள் பதக்கங்களைப் பெற்றன. தற்போது, அமெரிக்காவுக்கு அடுத்த படியாகச் சீனா, பிரிட்டன், ரஷியா, தென் கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முறையே தங்கப் பதக்க வரிசையின் 2வது முதல் 6வது வரையான இடங்களில் உள்ளன.