30வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட சீனப் பிரதிநிதிக் குழு 14ம் நாள் லண்டனிலிருந்து பெய்ஜிங் திரும்பியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் அரசவை உறுப்பினருமான லியு யன் துங் அம்மையார், பெய்ஜிங் விமான நிலையத்தில் அக்குழுவை வரவேற்றார்.
நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி, சீன விளையாட்டு எழுச்சியை வெளிகாட்டிய சீனப் பிரதிநிதிக் குழுவை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மற்றும் சீன அரசவையின் சார்பாக, லியு யன் துங் அம்மையார் வெகுவாகப் பாராட்டினார். வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பணியாளர்களுக்கும், ஊக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனப் பிரதிநிதிக் குழு, 38 தங்கப்பதக்கங்களையும் 27 வெள்ளிப்பதக்கங்களையும், 23 வெண்கலப்பதக்கங்களையும் பெற்றது.