முன்பு, மேலை நாட்டுச் செய்தி ஊடகங்கள் மூலம் திபெத் பற்றிய தகவல்களை ஆஸ்திரேலிய மக்கள் அறிந்து கொண்டனர். அவற்றில் சில உண்மைக்குப் புறம்பானவையாகும். எனவே, இத்தகைய கருத்தரங்கு மூலம், ஒன்றுக்கிடை ஒன்று புரிந்துணர்வை அதிகரிப்பதோடு, ஆஸ்திரேலிய மக்கள் திபெத்தின் மீதான புரிந்துணர்வை மேலும் முன்னேற்ற விரும்புவதாகச் சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் வரலாற்றுப் பிரிவின் தலைவர் சாங்யூன் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.