2015ஆம் ஆண்டு வரை, திபெத்தின் சுற்றுலாத் துறை வளர்ச்சியளவு 2010ஆம் ஆண்டில் இருந்ததை விட, இரண்டு மடங்கு அதிகரிக்கும். திபெத்தில், 10 கிராமப்புற சுற்றுலா முன்மாதிரி மாவட்டங்கள், 20 சிறப்புச் சுற்றுலா வட்டங்கள் மற்றும் கிராமங்கள், 200 சிறப்புச் சுற்றுலா ஊர்கள், 1000 நட்சத்திர நிலை விவசாயிக் குடும்ப விருந்தகங்கள் ஆகியவற்றைக் கட்டியமைக்கும் இலக்கு நனவாக்கப்படும்.
திபெத் கிராமப்புறச் சுற்றுலா துறை உயர்வேகத்தில் வளர்ந்து வருவதால், வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்தின் வாழ்க்கை நிலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. கிராமப்புறச் சுற்றுலாத் துறை விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்குப் புதிய வழிமுறையாக மாறியுள்ளது.