• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மூன்றாவது சீன-இந்தியக் கருத்தரங்கு
  2012-08-31 17:45:06  cri எழுத்தின் அளவு:  A A A   
"கல்விப் பரிமாற்ற ஒத்துழைப்பும், புத்தாக்கத் துறையில் திறமைசாலிகளின் பயிற்சியும்" என்ற தலைப்பிலான மூன்றாவது சீன-இந்திய கருத்தரங்கு 30ம் நாள் சீனாவின் தியேன் ஜின் நகரில் துவங்கியது. மும்பை பல்கலைக்கழகம், ஹைதிராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியாவின் பத்துக்கு அதிகமான உயர் கல்வி நிலையங்களின் பிரதிநிதிகளும், தியேன் ஜின் மாநகரின் கல்வித் துறைப் பிரமுகர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

தியேன் ஜிங் மாநகரின் துணைத் தலைவர் ட்சாங் சீன் ஃபாங் இக்கருத்தரங்கினை வெகுவாகப் பாராட்டினார். இந்தக் கருத்தரங்கை வாய்ப்பாகக் கொண்டு, சீன-இந்திய ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, சீன-இந்திய நட்புறவை அதிகரிப்பதற்கு தியேன் ஜின் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீனாவும் இந்தியாவும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகும். இரு நாட்டு மக்களுக்கிடை நட்புறவு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. இவ்வாண்டு சீன-இந்திய நட்பார்ந்த ஒத்துழைப்பு ஆண்டாகும். புரிந்துணர்வை அதிகரித்து, பரிமாற்றங்களை வலுப்படுத்தும் புதிய மேடையை இரு தரப்புகளுக்கு இந்த கருத்தரங்கு வழங்கியுள்ளது. சீன- இந்திய நடைமுறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் புதிய வளர்ச்சியைத் தூண்டுவதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார் அவர்.

வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் லீன் யீ பேசுகையில், ஒத்துழைப்பு பன்முகங்களிலும் வளர்ந்து வரும் புதிய காலக் கட்டத்தில் சீன-இந்திய உறவு நுழைந்துள்ளது என்று தெரிவித்தார். இவ்வாண்டு சீன-இந்திய நட்பார்ந்த ஒத்துழைப்பு ஆண்டாகவும், சீன-இந்திய நட்புறவுச் சங்கம் நிறுவப்பட்டதன் 60வது வைரவிழா ஆண்டாகவும் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். புரிந்துணர்வை அதிகரித்து, பரிமாற்றங்களை வலுப்படுத்துவது, சீன-இந்திய உறவின் வளர்ச்சியில் என்றும் மாறாத கருத்தாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவுக்கான இந்தியத் தூதரகத்தின் பண்பாட்டுத்துறை அலுவலர் அருண் சாகு பேசுகையில், புத்தாக்கத் திறமைசாலிகளைப் பயிற்றுவித்து, கல்வித் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், மேலதிக மக்களுக்கு நன்மை தர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"உலகளவில், சீனாவிலும் இந்தியாவிலும் இளைஞர்கள் மிகஅதிகம். இரு நாடுகளின் அடுத்த தலைமுறையினர்களுக்கிடை மேலதிக பரிமாற்றங்களும் புரிந்துணர்வுகளும் மிக முக்கியமாக இருக்கின்றன. அவர்கள் ஒன்றுக்கொன்று புரிந்து கொண்டு, பரிமாற்றங்கள் மேற்கொண்டால், இரு நாடுகளுக்கும் மேலும் அருமையான எதிர்காலம் உண்டு" என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040