இவ்வாண்டின் முதல் 8 திங்களில், திபெதிலான சுற்றுலாத் துறை, மிகவும் விறுவிறுப்பாக இருக்கின்றது. திபெத்தைப் பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் சுற்றுலா வருமானமும், வரலாற்றில் மிக அதிகமான பதிவாகியுள்ளது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா ஆணையம் செப்டம்பர் திங்கள் 3ம் நாள் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
புள்ளிவிபரங்களின் படி, இவ்வாண்டின் ஜனவரி திங்கள் முதல் ஆகஸ்ட் திங்கள் வரை, திபெத்துக்குச் சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 70 இலட்சத்தைத் தாண்டியது. இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட, 25 விழுக்காட்டுக்கு மேல் அதிகமாகும். ஒட்டுமொத்த சுற்றுலா வருமானம், 750 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட, 30 விழுக்காடு அதிகம்.