இவ்வாண்டின் இலையுதிர் காலக் கல்விப் பருவம் முதல், இலவச நகரப் பள்ளிக்கு முந்தைய கல்வி என்ற கொள்கையைத் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் செயல்படுத்தத் துவங்கியுள்ளது. அதற்கு முன், வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்தில், இலவசப் பள்ளிக்கு முந்தைய கல்வி, நகர மற்றும் கிராமப்புறக் கட்டாய கல்வி, மேனிலை பள்ளிக் கல்வி ஆகிய கொள்கைகளைத் திபெத் செயல்படுத்தியுள்ளது. இது வரை, பள்ளிக்கு முந்தைய 3 ஆண்டுகள் முதல், மேனிலை பள்ளிக் கல்வி வரையான 15 ஆண்டுகள் இலவசக் கல்வியைத் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் பன்முகங்களிலும் நிறைவேற்றுவதை அது கோடிட்டுக்காட்டுவதாக என்று சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கல்விப் பணியகம் அமைச்சகம் தெரிவித்தது.
இவ்வாண்டின் இலையுதிர் காலக் கல்விப் பருவத்தில், 38 ஆயிரத்துக்கு மேலான நகரக் குழந்தைகள் அக்கொள்கையின் பயனை அனுபவிக்கலாம். இலவசக் கல்விக்கான முதலீடு, 6 கோடியே 90 லட்சத்துக்கு அதிகமான யுவானை எட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.