இவ்வாண்டில், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் கமிட்டியும், அரசும், பொது மக்களின் உடல் நலத்தை முன்னேற்ற, குறைந்த கட்டணத்தில் மருத்துவ பரிசோதனை, பிறவி இதய நோய்க்கு இலவச சிகிச்சை ஆகிய நலப் பணிகளை மேற்கொள்கின்றன. ஆக்ஸ்ட் பாதி வரை, திபெத்தில், 19 இலட்சத்து 49 ஆயிரத்து 119 பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை, திபெத் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள மக்களின் மொத்த எண்ணிக்கையில் 67.21 விழுக்காடு வகிக்கிறது.
பொது மக்களின் மருத்துவ பரிசோதனையின் மூலம், திபெத் சுகாதார வாரியம், மிக அதிகமளவில், பொது மக்களின் உடல் நல நிலையை அறிந்து கொள்ளலாம். பொது மக்களை தாக்கும் நோய்களை வேகமாக அறிந்து கொண்டு, வெகுவிரைவில் சிகிச்சை அளிக்கலாம் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுகாதார ஆணையத்தின் மருந்து மற்றும் சிகைச்சைப் பிரிவின் தலைவர் லி பின் கூறினார்.