2006 முதல் 2010ம் ஆண்டு வரை, திபெத்தில் எல்லைப்பிரதேசத்தைப் பொருளாதாரத்தை வளர்த்து, மக்களைச் செல்வமடையவைப்பது என்ற நடவடிக்கையில் 56 கோடியே 70 இலட்சம் யுவானுக்கு மேல் முதலீடு செய்யப்பட்டது. 2011 முதல் 2015ம் ஆண்டு வரை, இதில் 80 கோடி யுவான் முதலீடு செய்யப்படும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொடர்புடையவர் ஒருவர் அண்மையில் தெரிவித்தார்.
திபெத்தில் எல்லைப்பிரதேசப் பொருளாதாரத்தை வளர்த்து, மக்களைச் செல்வமடையச் செய்வது என்ற நடவடிக்கையினால், எல்லைப் பிரதேசத்தின் சமூக மற்றும் பொருளாதார இலட்சியம் பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இப்பிரதேசத்தின் ஆயர்கள் மற்றும் விவசாயிகளின் உற்பத்தித் திறனும் வாழ்க்கைத் தரமும், பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளன என்று அறியப்படுகிறது.