திபெத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய மாநாடு
2012-09-21 14:45:57 cri எழுத்தின் அளவு: A A A
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் இரண்டாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு 21ம் நாள் லாசா நகரில் துவங்கியது. கடந்த 5 ஆண்டுக்காலத்தில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியை இம்மாநாடு தொகுப்பதோடு, தற்போதைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைமையை ஆராய்ந்து, தற்கால மற்றும் இனிவருகின்ற காலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடமையை ஏற்பாடு செய்யும். இது வரை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், 47 இயற்கைப் பாதுகாப்பு மணடலங்கள், 21 உயிரின வாழ்க்கை பாதுகாப்பு மண்டலங்கள், 8 தேசிய நிலை வனப் பூங்காக்கள், 3 தேசிய நிலை சதுப்பு நிலப் பூங்காக்கள், 4 தேசிய நிலை நிலவியல் பூங்காக்கள், 3 தேசிய நிலை இயற்கை காட்சி மண்டலங்கள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்