ஆறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளின் மூலம், ஓலைச் சுவடித் திருமறைகளுக்கான திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பாதுகாப்புப் பணியில் குறிப்பிடத்தக்க சாதனைகள் எட்டப்பட்டுள்ளன.
இது வரை, சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஓலைச் சுவடித் திருமறைப் புத்தகங்களின் வகைகள் பொதுவாக ஓராயிரத்தைத் தாண்டுகின்றன. அப்புத்தகங்களில் சுமார் 60 ஆயிரம் ஓலைகள் அடங்கியுள்ளன. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மதிப்புக்குரிய ஓலைச் சுவடித் திருமறைகளின் அட்டவணை, அவற்றின் பிரதிகள் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் முதலிய குறிப்பிடத்தக்க சாதனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஓலைச் சுவடித் திருமறைகள் என்பவை பண்டைக்காலத்தில், ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட திருமறைகள் ஆகும். பண்டைக்கால இந்தியா அதன் தோற்றுவாயாகும். திபெதிலுள்ள ஓலைச் சுவடித் திருமறைகள், 8ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மை புத்த மதத் திருமறைகள் ஆகும், சில பண்டைக்கால இந்தியாவி்ன் சமஸ்கிருத ஆவணங்களாகும்.