கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் திபெதிலுள்ள வானிலைக் கண்காணிப்பு அமைப்பு முறையைத் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் ஆக்கப்பூர்வமாக முன்னேறி வருகிறது. தற்போது, தலைமைத் தானியங்கி வானிலைக் கண்காணிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 165-ஐ எட்டியுள்ளது. பெருமளவிலான முறைமைப்படுத்தப்பட்ட சீற்ற வானிலைக்கான கண்காணிப்புத் திறன் பெரிதும் உயர்ந்துள்ளது.
திபெத் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் வானிலை நிலவியல் அமைப்பு முறையின் மேல்பகுதியில் உள்ளது. அது, சீனாவின் வானிலை அமைப்பில் முக்கிய இடமாகக் கருதப்படுகிறது. அது மட்டுமல்ல, உலகக் காலநிலை மாற்றங்களின் உணர்வலை மற்றும் வலுவற்ற தன்மை வாய்ந்த பிரதேசமுமாகும். ஆகவே, திபெதின் ஒட்டுமொத்த வானிலைக் கண்காணிப்புப் பணியைச் சீராக மேற்கொள்வது, ஆகாயநிலை அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டு, வானிலை முன் அறிவிப்பு நிலையை உயர்த்தி, வானிலைச் சேவைத் திறமையை முன்னேற்றும் அடிப்படையாகும்.