26ஆம் நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தலைச்சிறந்த வீராங்கனையாக தேர்வான இந்திய அணியின் துணைத் தலைவர் ஹாமன்ப்லீத் கூர்
வங்காளதேச அணியின் வெற்றிக் கொண்டாட்டம்
சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில், 26 ஆம் நாள் முற்பகல் வங்காளதேச-நேபாள அணிகள் மோதின. நேபாள அணி முதலில் விளையாடி 45 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து ஆடிய வங்காள அணி 46 ஓட்டங்களை எடுத்து, நேபாள அணியைத் தேற்கடித்த்து. பிற்பகல் நடைபெற்ற ஆட்டம் இந்திய-சீன ஹாங்காங் அணிகளுக்கிடை நடைபெற்றது, இந்திய அணி அதிரடியாக விளையாடி 166 ஓட்டங்கள் எடுத்தது. சீன ஹாங்காங் அணி 24 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியின் துணைத் தலைவர் ஹாமன்ப்லீத் கூர் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.