இந்திய அணி
ஆசிய மகளிர் இருபது கிரிக்கெட் போட்டி 28ஆம் நாள் குவாங்சோ நகரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 28 ஆம் நாள் காலை வங்காளதேச-இலங்கை அணிகள் மோதின. 62 ஓட்டங்கள் எடுத்த வங்காள அணியிடம், 57 ஓட்டங்களே எடுத்த இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.
பிற்பகல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி முதலில் விளையாடி 93 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணி அதிரடியாக விளையாடி 94 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியின் தலைவர் மித்லி ராஜ் இன்று நடப்புப் போட்டியில் 2வது முறையாக இவ்வாட்டத்தின் தலைசிறந்த வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.