• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச பாதையில் தொடர்ந்து நடைபோடுவது
  2012-11-08 14:10:21  cri எழுத்தின் அளவு:  A A A   

உலக செய்தி ஊடகங்களால் எதிர்காலத் தீர்வு என கருதப்படுகின்ற ஒரு வார நிகழ்வு, இன்று நவம்பர் 8ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனாவை ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு தான், அந்த நிகழ்வாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஹு சிந்தாவ் துவக்க விழாவில் உரைநிகழ்த்தியபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீனத் தனிச்சிறப்புடைய சோஷலியச பாதையில் சீனா எப்போதும் வளர்ந்து வருவதை வலியுறுத்தினார்.

சுமார் 100ஆண்டுக்கால முயற்சியுடன், நமது நாட்டின் நடைமுறைக்கு ஏற்ற சோஷலிச பாதையை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தேடி வளர்த்துள்ளது. அதன்படி, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையும் அமைப்புமுறையும் உருவாகியுள்ளன. இந்த மூன்று சாதனைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 8ஆம் நாள் மாநாட்டில் முதல்முறையாக விளக்கியுள்ளது. இவை சீனச் சமூக வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் முக்கியத்துவமும் உயர்வாக பாராட்டப்படுகிறது. இதுப் பற்றி, ஹு சிந்தாவ் கூறியதாவது

சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச பாதை, சிந்தனை அமைப்புமுறை, சோஷலிச அமைப்பு ஆகியவை, கட்சியும் மக்களும் 90க்கு மேலான ஆண்டுகளாக உருவாக்கிய அடிப்படை சாதனைகளாகும். அவற்றை பின்பற்றும் அடிப்படையில் தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்று ஹு சிந்தாவ் கூறினார்.

ஹு சிந்தாவ் வழங்கிய அறிக்கையில், எதிர்காலப் பணிகள் விபரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில், சீனச்சமூகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் எதிர்கொள்ளப்படும் மிக முக்கிய கவனம் செலுத்தப்படும் மற்றும் சிக்கலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் முன்மொழியப்படுகின்றன.

பொருளாதாரத்தின் தொடரவல்ல மற்றும் சீரான வளர்ச்சியை நிலைநிறுத்துவது, அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தைத் தூண்டுவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, சமூக நீதியை பேணிக்காப்பது, கட்சிக் கட்டுமானத்தை வலுப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக, அறிக்கையில் விபரமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பு மற்றும் படைக் கட்டுமானம் பற்றி குறிப்பிடுகையில், சீனா, தற்காப்புத் தன்மையுடைய தேசிய பாதுகாப்பு கொள்கையை கடைபிடிக்கும் என்பது அறிக்கையில் மீண்டும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கான கட்டுமானங்களை வலுப்படுத்துவதன் நோக்கம், நாட்டின் அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டை பேணிக்காப்பதாகவும், நாட்டின் அமைதியான வளர்ச்சியை உறுதிச் செய்வதாகவும் அமைகிறது என்று வலியுறுத்தப்படுகிறது.

மேலும், வெளிநாட்டுறவைக் கையாளும்போது, அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றை மையமாக கொண்ட கோட்பாட்டை சீனா பின்பற்றும் என்று அறிக்கையில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளுடனான உறவை மேம்படுத்தி வளர்க்கவும், ஒத்துழைப்புத் துறைகளை விரிவாக்கவும், கருத்துவேற்றுமைகளை உரியமுறையில் சமாளிக்கவும், தொலைநோக்கு, நிதானம் மற்றும் சீரான புதிய பெரிய நாட்டுறவை நிறுவவும் பாடுபடுவோம் என்று ஹு சிந்தாவ் தெரிவித்தார்.

அமைதி மற்றும் வளர்ச்சிக்கான விருப்பம், சீன மக்களிடம் உள்ளது. பல்வேறு நாடுகளின் மக்களுடன் இணைந்து, மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக சீன மக்கள் இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040