சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை
2012-11-10 10:31:26 cri எழுத்தின் அளவு: A A A
இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் தேவை வலுவாக இருப்பதால் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை 9ம் நாள் உயர் பதிவாகியுள்ளது.
நியூயார்க் வணிகச் சந்தையில் டிசம்பர் திங்களில் பட்டுவாடா செய்யப்படும் தங்கத்தின் விலை அன்று ஒரு அவுன்ஸுக்கு 1730.9 அமெரிக்க டாலராகியது. இது அக்டோபர் 18ஆம் நாளுக்குப் பிந்தைய மிக உயர் பதிவாகும்.
நவம்பர் 11ஆம் நாள் தீபாவளி விழா துவங்கும் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை பெரிதும் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், சீனாவிலும் இவ்வாண்டு தங்க சந்தையின் தேவை கடந்த ஆண்டில் இருந்ததை விட ஒரு விழுக்காடு அதிகரித்து 860 டன்னாக இருக்கக் கூடும். அதனுடன் சீனா இந்தியாவுக்குப் பதிலாக உலகில் மிகப் பெரிய தங்க நுகர்வு நாடாக மாறும் என்று மதிப்பிடப்படுகிறது.
அமெரிக்க அரசுக் கடன் மதிப்பிறங்குகின்ற அபாயத்தைக் கையாளும் பொருட்டு, சீனா அதிக தங்கத்தை வாங்குகிறது என்று சில சந்தை ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். தற்போது சீனா அமெரிக்காவின் அதிகளவு கடன்களை வாங்கும் நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்