• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனச் சமூக பொருளாதார வளர்ச்சி
  2012-11-11 10:43:28  cri எழுத்தின் அளவு:  A A A   

அடுத்து சீனச் சமூக பொருளாதார வளர்ச்சி இலக்கு என்னும் செய்தி விளக்கம். அறிவிப்பாளர் இலக்கியா.

சீனச் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலைமை பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் செய்தி மையம் 10ஆம் நாள் பிற்பகல் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. இவ்வாண்டு சீனப் பொருளாதார நிலைமை, பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றம், சமத்துவக் கல்வி, சமூகக் காப்புறுதி முதலிய அம்சங்கள் குறித்து, தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் இயக்குனர் சாங் பிங் இக்கூட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். சீனாவின் பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்துவதோடு, நிதானமற்ற பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க, கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக அவர் கூறினார். அத்துடன் திட்டமிட்ட குறிக்கோள்களை, சீனப் பொருளாதாரம் நனவாக்குமென சாங் பிங் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வாண்டின் முற்பாதி முதல், பொருளாதாரத்தின் நிதானமான அதிகரிப்பை நனவாக்க, ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையின் நிதானத் தன்மையை நிலைநிறுத்தும் அடிப்படையில், ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டுத் திறனை வெளிக்கொணர்வதை, நடுவண் அரசு வலுப்படுத்தி வருகிறது. உள்நாட்டின் தேவையை மேலும் விரிவுப்படுத்துவது, குடிமக்களின் வருமானத்தை அதிகரிப்பது, சமூகக் காப்புறுதியை நன்றாக நனவாக்குவது, நுகர்வுச் சூழலை மேம்படுத்துவது முதலியவை, இக்கட்டுப்பாடுகளில் அடங்குகின்றன. நுகர்வின் அதிகரிப்பை நிலைநிறுத்தியபோது, கட்டமைப்பைச் சரிப்படுத்தும் அடிப்படையில் அதற்குத் தேவையான முதலீட்டையும், நடுவண் அரசு அதிகரித்துள்ளது என்று சாங் பிங் கூறினார்.

பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றத்தை, 18வது தேசிய மாநாட்டின் அறிக்கை மீண்டும் குறிப்பிட்டுள்ளது. தற்போது சீனாவிற்கு மிகவும் தேவையான கட்டமைப்பு மாற்றங்கள் பல காணப்பட்டுள்ளதாக சாங் பிங் தொடர்புடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் கூறியதாவது

"2011ஆம் ஆண்டிலும், இவ்வாண்டு முதல் மூன்று காலாண்டுகளிலும், உள்நாட்டுத் தேவையினால் ஏற்பட்ட தூண்டுதல் பங்களிப்பு, 100 விழுக்காடு தாண்டியது. நுகர்வு, முதலீடு, ஏற்றுமதி ஆகிய மூன்று துறைகளின் மூலம், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு, இந்தப் பங்களிப்பு பொருந்தியது."என்றார் அவர்.

தற்போது கல்வி, மருத்துவம், வருமானம் குறைந்தோருக்கு வீட்டு வசதித் திட்டம், சமூகக் காப்பீடு உள்பட, சீனாவின் அடிப்படை பொதுச் சேவை அமைப்பு முறையின் கட்டுகோப்பு, பொதுவாக உருவாகியுள்ளது என்று சான் பிங் விளக்கிக் கூறினார்.

எதிர்காலத்தில் பொதுச் சேவைத் துறையில் சீனா ஒதுக்கீட்டை அதிகரிக்கும். சிறப்பாக கிராமங்கள், மேற்குப் பகுதி மற்றும் வறிய பிரதேசங்களில் ஒதுக்கீட்டை அதிகரித்து, சமத்துவ பொதுச் சேவைகளை மக்கள் அனைவரும், அனுபவிப்பதை, சீனா செயல்படுத்துமென சாங் பிங் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு கல்விக்கான நிதி ஒதுக்கீடு, உள்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 4 விழுக்காடு வகிக்கும் இலக்கை நிறைவேற்றும். இவ்வாண்டு சீனாவின் மொத்த நிதி வருமானம், 11 இலட்சம் கோடி யுவானைத் தாண்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஆறில் ஒரு பங்கு தொகை, கல்வித் துறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சாங் பிங், கல்வி பிரச்சினை குறிப்பிடுகையில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040