• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொருளாதார வளர்ச்சியடைவதற்கு சீனாவின் முயற்சி
  2012-11-11 18:05:47  cri எழுத்தின் அளவு:  A A A   

அனைத்துலகச் சந்தையின் தேவைப் பற்றாக்குறை நிலையில், சீன வெளிநாட்டு வர்த்தகத் துறையின் அதிகரிப்பு வேகம், உலகின் மிகப் பெரும்பாலான பொருளாதாரக் குழுக்களை முந்தியுள்ளது. அனைத்துலகச் சந்தையில் சீனா பிடித்திருக்கும் இடத்தில் பின்னடைவு இல்லை. முன்னேற்றம் கண்டுள்ளது என்று சீன வணிக துறை அமைச்சர் சென் தேமிங் தெரிவித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் பிரதிநிதியான அவர் 10ஆம் நாள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் திங்களுக்குப் பின், சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு வேகம் குறைந்து வரும் நிலை காணப்படவில்லை. சீனப் பொருளாதாரம் நிதானமாகும் நிலை மேலும் தெளிவாக உள்ளது. இவ்வாண்டு சமூகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இலக்கை நிறைவேற்ற முடியும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகச் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத் தலைவர் சாங் பிங் தெரிவித்தார்.

தொலைநோக்குப்பார்வையில், சீனப் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் பல அறைகூவல்களைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவற்றைச் சமாளிப்பதற்கு வளர்ச்சி மற்றும் சீர்திருத்தம் மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொருளியலாளர்கள் பொதுவாகக் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040