• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் விடுதலைப் படைப் பிரதிநிதிகளின் விவாதம்
  2012-11-11 09:48:07  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஹூச்சிந்தாவ் கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் வழங்கிய அறிக்கை பற்றி சீன விடுதலை படைப் பிரதிநிதிகள் கடந்த சில நாட்களில் விவாதித்தனர். கட்சியின் 18வது தேசிய மாநாட்டு எழுச்சியை முழுமையாக செயல்படுத்துவதை, தற்போதைய முதன்மை அரசியல் கடமையாகவும், நீண்டக்கால நெடுநோக்கு கடமையாகவும் கொண்டு, புதிய துவக்கப் புள்ளியில் தேசிய பாதுகாப்பு மற்றும் படை நவீனமயமாகும் வளர்ச்சியை விரைவுபடுத்த பாடுபட போவதாக இப்பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


கட்சியின் 18வது தேசிய மாநாடு மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது . சீனாவின் முப்படையும், ஆயுதக்காவற்துறையும் 18வது தேசிய மாநாட்டு எழுச்சியை முழுமையாக செயல்படுத்துவதை, தற்போதைய முதன்மை அரசியல் கடமை மற்றும் நீண்டக்கால நெடுநோக்கு கடமையாகக் கொள்ள வேண்டும் என்று பிரதிநிதி லியாங் குவாங் லெய் தெரிவித்தார். பொதுச் செயலாளர் ஹூச்சிந்தாவ் வழங்கிய அறிக்கையின் அம்சங்கள், முக்கிய கண்ணோட்டங்கள், அவற்றின் முக்கிய தத்துவ மதிப்பு, அரசியல் மதிப்பு மற்றும் நடைமுறை மதிப்பு மீதான புரிந்துணர்வை ஆழமாக்கி, நடைமுறைக்கு ஏற்ப அவற்றை செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


கருத்துச் சுதந்திரத்திற்கும் கருத்துக்களை ஒருங்கிணைப்பதற்கும் இடையே இசைவான போக்கையும், தத்துவ புத்தாக்கத்துக்கும், நடைமுறை புத்தாக்கத்துக்குமிடை ஒருங்கிணைந்த இணைப்பையும் ஹூச்சிந்தாவ் வழங்கிய அறிக்கை முழுமையாக வெளிப்படுத்துகிறது. அது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் இலட்சியத்தின் வளர்ச்சிக்கு முக்கிய வழிகாட்டல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதிநிதி செங் பிங் தே தெரிவித்தார்.
கட்சியின் தேசிய மாநாட்டில் பொதுச் செயலாளர் ஹூச்சிந்தாவ் வழங்கிய அறிக்கை கட்சியின் தத்துவ புத்தாக்கம் மற்றும் நடைமுறை புத்தாக்கத்தின் முக்கிய சாதனையாகும் என்றும், கட்சியின் அடிப்படை நோக்கத்தை உறுதியாக நடைமுறைப்படுத்தி, பொது மக்களுக்கு மேலதிக நலன்களைத் தந்து, அவர்களின் கவலையை நீக்கி, வளர்ச்சியின் சாதனைகளை அனைவரும் அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்றும் பிரதிநிதி சாங் வான் சுவான் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040