• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கட்சியின் 18வது தேசிய மாநாடு பற்றி இந்திய நேயர்களின் கருத்து
  2012-11-11 14:40:23  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஹூச்சிந்தாவ் வழங்கிய அறிக்கை, இந்தியாவில் உள்ள சீன வானொலி நிலையத்தின் நேயர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச சேர்ந்த நேயர் ரவி சிறீவாஸ்தவா அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடுகையில், தற்போது, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பு முறைச் சீர்திருத்தத்தின் வளர்ச்சிப் போக்கில் சீனா இருப்பதாகத் தெரிவித்தார். சீனா அதிர்ச்சி தரும் வேகத்துடன் வளர்ந்து வருகிறது என்றும், சீனாவின் விரைவான வளர்ச்சி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான தலைமையிலிருந்தும், சீன நாட்டின் நிலைமைக்கு ஏற்ற கொள்கைகளிலிருந்தும் பிரிக்கப்பட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

உலகில் இரண்டாவது பெரிய பொருளாதார சமூகமாக சீனா மாறியுள்ளது என்றும், உலக வல்லரசுகளில் ஒன்றான சீனா, பல்வகை இலட்சியங்களில் பயன்மிக்க சாதனைகளைப் பெற்றுள்ளது என்றும் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவி மினு குமாரா அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தார்.

சீன வானொலி நிலையத்தின் இந்திய இணையத் தளம் மூலம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு பெய்சிங்கில் சிறப்பாக துவங்கிய செய்தியை அறிந்து கொண்டு, மகிழ்ச்சியடைந்து, இம்மாநாட்டில் அதிக சாதனைகள் பெறப்பட வாழ்த்துகிறோம் என்று இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய நேயர் மன்றத்தின் தலைவர் பிதான் சந்திர சன்யால் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040