• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக வளர்ச்சிக்குத் துணைபுரியும் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முறை மாற்றம்
  2012-11-11 18:28:58  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு பெய்ஜிங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சியைத் தலைப்பாகவும், பொருளாதார வளர்ச்சி முறை மாற்றத்தை விரைவுபடுத்துவதை மையமாகவும் கொள்வதே, சீன வளர்ச்சியின் மொத்த நிலைமையுடன் தொடர்புடைய நெடுநோக்குத் தெரிவாகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஹுச்சிந்தாவ் விவாதத்துக்காக கட்சிப் பிரதிநிதிகள் அனைவருக்கும் வழங்கிய அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார வளர்ச்சி முறையை சீனா தொடர்ந்து மாற்றி அமைத்தி, வளர்ச்சி வேகத்தை நோக்கமாகக் கொண்ட நிலையிலிருந்து வளர்ச்சித் தரம் மற்றும் பயன் என்பதை நோக்கமாகக் கொண்ட நிலைக்கு மாறும். அதேவேளை, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முறை மாற்றம் உலக வளர்ச்சிக்கும் துணைபுரியும் என்பதையே இது காட்டுகிறது.

நவம்பர் 8ஆம் நாள், தேபியன் மின்சார கருவி பங்கு முதலீட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநரான சாங்சின், இம்மாநாட்டின் பிரதிநிதி என்ற முறையில், ஹுச்சிந்தாவ் வழங்கிய அறிக்கையைக் கேட்டறிந்தார். அவர் பேசுகையில், தொழில் நிறுவனத்தின் வளர்ச்சி, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தைச் சார்ந்திருக்கிறது என்று கருத்து தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் பொருளாதாரக் கட்டமைப்புக்கான நெடுநோக்குச் சரிப்படுத்தலை சீனா வலுப்படுத்தி வருகிறது. சில ஆண்டுக்கால ஆய்வுகளின் மூலம், பொருளாதார அதிகரிப்பு முறையை மாற்றுவதில் சீனா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று இம்மாநாட்டின் பிரதிநிதியும், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவருமான சாங்பிங் குறிப்பிட்டார். தேவைக் கட்டமைப்பை எடுத்துக்காட்டாகக் கொண்டு அவர் கூறியதாவது—

"முன்பு ஏற்றுமதி மற்றும் முதலீட்டைச் சார்ந்து பொருளாதார வளர்ச்சியைத் தூண்டினோம். ஆனால் தற்போது சீனாவின் தேவைக் கட்டமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, உள்நாட்டுத் தேவை விரிவாக்கத்தை முக்கியமாகச் சார்ந்து பொருளாதார அதிகரிப்பைத் தூண்டுகின்றோம்" என்று அவர் கூறினார்.

மேலும், சீன அரசவையின் வளர்ச்சி ஆய்வு மையத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத் துறை தலைவர் யூபின் பேசுகையில், பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியை நிலைநிறுத்த வேண்டுமானால், பொருளாதார அமைப்பு முறைச் சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

பொருளாதாரத்தின் வளர்ச்சி முறை மாற்றத்தை நிறைவேற்றி, பன்முக, ஒருங்கிணைந்த மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை சீனா உண்மையில் நனவாக்க வேண்டுமானால், அது சீனத் தொழில் நிறுவனங்களின் முயற்சி மற்றும் ஆய்வைச் சார்ந்திருக்க வேண்டும். இது குறித்து சாங்சின் கூறியதாவது—

"அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்திலும் முன்னேறிய தொழில் நுட்பத்தின் அடிப்படை ஆய்வுத் துறையிலும் மேலும் பெரும் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், புத்தாக்கத் தொழில் நிறுவனத்தின் கட்டுமானத்தையும், அதன் தொடரவல்ல, சீரான மற்றும் விரைவான வளர்ச்சியையும் நனவாக்க முடியும்" என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040