• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் பண்பாட்டுப் பணிகள்
  2012-11-12 10:00:22  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன கம்யுனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் செய்தி மையம் நவம்பர் 11ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் 3வது செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை, சீனப் பண்பாட்டு அமைச்சகம், சீனத் தேசிய வானொலி, திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பணியகம், சீனச் செய்தி மற்றும் வெளியீ்ட்டக தலைமைப் பணியகம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட 300க்கு மேலான சீன வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் சீனப் பண்பாட்டு அமைப்பு முறையின் சீர்திருத்தத்தையும் பொதுப் பண்பாட்டுச் சேவைத் துறையின் கட்டுமானத்தையும்  விவரித்தனர்.

கடந்தப் பத்தாண்டுகளில், மக்களுக்கு நலன் தரும் பணிகளை நகர மற்றும் கிராமப்புற பொது பண்பாட்டுச் சேவை பயன்தரும் முறையில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்போக்கை முன்னேற்றியுள்ளது என்று சீனத் தேசிய வானொலி, திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பணியகத்தின் துணைத் தலைவர் தியன் ஜின் கூட்டத்தில் கூறினார்.

நாடு முழுவதிலும் எல்லா வசதியுடைய நிர்வாக ஊரகங்களில் விவசாயிகளுக்கான சிறு நூலகங்கள் இருக்கின்றன என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீனச் செய்தி மற்றும் வெளியீ்ட்டக தலைமைப் பணியகத்தின் குழுச் செயலாளரும், துணைத் தலைவருமான ஜியாங் ஜியே குவாவ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040