• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருளாதாரத்தில் சீனப் பொருளாதாரத்தின் செல்வாக்கு
  2012-11-12 15:15:32  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு பல வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இம்மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சீனப் பொருளாதாரக் கொள்கையின் வளர்ச்சித் திசை, எதிர்காலத்தில் சீனாவின் ஏன் உலகப் பொருளாதார வளர்ச்சியில் நேரடியான செல்வாக்கு ஏற்படுத்தும் என்று ஆய்வாளர் சிலர் குறிப்பிட்டனர்.

பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் தலைவர்கள் செலுத்திய கவனம், அவர்கள் நீண்டகாலமாகப் பொருளாதார வளர்ச்சியில் நிலைநிறுத்தி வரும் அனுபவம் ஆகியவை, உலக நிதி நெருக்கடியில் சீனா நிதானமாக வளர முடிவதற்க்கான முக்கிய காரணியாகும் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தித் தாள் குறிப்பிட்டது.

சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வழிமுறை, விரைவான பொருளாதார வளர்ச்சி நிலையிலிருந்து இயல்பான வளர்ச்சித் திசைக்கு மாறி வருகிறது. சீனாவின் பொருளாதாரம் முதிர்ச்சி அடையும் பாதையில் இருப்பதால், உலகப் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கு சிறந்த பங்களிக்கும் என்று பிரான்ஸ் பார்க்லெஸ் வங்கியின் ஆய்வு அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, தென் கொரியாவின் கூட்டுச் செய்தி நிறுவனம் அறிவித்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040