• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகின் கவனத்தை ஈர்க்கும் சீன வளர்ச்சி
  2012-11-13 16:04:14  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் சர்வதேசச் சமூகம் பெரும் கவனம் செலுத்துகிறது. தொடர்ந்து சில நாட்களாக, வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், செய்தி ஊடகங்கள், வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர் ஆகியோர், சீன வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இம்மாநாடு, சீன மக்களுக்குத் தலைமை தாங்கி, மேலும் பெரும் செழுமையையும், வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் நிறைவேற்றவும், சீனா, உலகின் பல்வேறு நாடுகளுடன், குறிப்பாக ஈராக்குடன் உறவை வலுப்படு்த்துவதில் முக்கிய பங்காற்றவும் வேண்டுமென ஈராக் அரசுத் தலைவர் ஜலால் தலபானி தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு, அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பயன்தரும் முறையில் செயல்படுத்தி நடைமுறைப்படுத்துவது, சீனா, உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைப் பெறுவதன் காரணங்களில் ஒன்று என்று வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய பரப்புரை மற்றும் கல்வித் துறையின் துணை அமைச்சர் பாம் வான் லின் தெரிவித்தார்.

ஸ்பெனிஷ் 20 நிமிடம் என்னும் செய்தித் தாள், விபரமான சரியான தரவுகளின் மூலம், சீனப் பொருளாதார வளர்ச்சியின் சாதனைகளை வெளியிட்டுள்ளது. அத்துடன், பிற நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை நாணய நெருக்கடியிலிருந்து விடுவிப்பதில் சீனா மேற்கொண்ட முயற்சிகளை அச்செய்தித் தாள் முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040