• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் கட்சி சாசனத் திருத்தம்
  2012-11-14 16:34:53  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு 14ஆம் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. அதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாசனம் 18வது முறையாக திருத்தப்பட்டது. கட்சிச் சாசனத் திருத்தம், 130 கோடி சீன மக்களின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டதாகும். இது காலத்தின் வளர்ச்சியின் தேவையாக இருப்பதால், ஆழமான வழிகாட்டல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நவம்பர் திங்கள் பெய்சிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டில், கட்சிச் சாசனத்தின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாக்சிஸ்ம், லெனினிசம், மாவ் சே துங் சிந்தனை, தெங் சியாவ் பிங் தத்துவம், மூன்று பிரதிநிதித்துவ சிந்தனை ஆகியற்றுடன் இணைந்து, அறிவியல் அடிப்படை வளர்ச்சி கண்ணோட்டம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டல் சிந்தனையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாசனம், அதன் "அடிப்படை சட்டமாகும்". இது "கட்சி அரசியல் அமைப்பு சட்டம்" என்று அழைக்கப்படுகிறது. கட்சிச் சாசனத்தின் வழிகாட்டல் சிந்தனை, இக்கட்சியின் இலக்கை உறுதிப்படுத்தி, கொள்கைகளை வகுத்து, நடைமுறைக்கு வழிகாட்டும் சிந்தனை மையமாகவும், தத்துவ அடிப்படையாகவும் இருக்கிறது.

புதிய காலத்தில், நலன்கள் மீதான பலதரப்பட்ட சமூக குழுவினரின் தேவையை எதிர்நோக்கி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, கட்சிச் சாசனத்தைத் திருத்துவது மூலம், அறிவியல் அடிப்படை வளர்ச்சிக் கண்ணோட்டத்தை கட்சியின் வழிகாட்டல் சிந்தனையாக உறுதிப்படுத்தியுள்ளது. இது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தத்துவ புத்தாக்க சாதனையாக இருக்கிறது. அது மட்டுமல்ல, ஓரளவு வசதிப் படைத்த சமூகத்தை பன்முகங்களிலும் உருவாக்குவதில் சீன மக்களுக்குத் தலைமை தாங்கும் போக்கில் முக்கிய நெடுநோக்கு திட்ட ஏற்பாட்டையும் இது வெளிப்படுத்தியுள்ளது. அருமையான வாழ்க்கை மீதான சீன மக்களின் ஆசைக்கு அளிக்கும் பதில் இதுவாகும் என்று சீனாவின் அறிஞர் சாய் ட்சு சியாங் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"அறிவியல் அடிப்படை வளர்ச்சிக் கண்ணோட்டத்தை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டல் சிந்தனையாக உறுதிப்படுத்துவது, பொது மக்களின் நலன்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வளத்தை வினியோகிக்கும் அதிகாரத்தைப் பெறுகிறது. கட்சியின் கொள்கைகள், வெவ்வேறான குழுக்களின் தேவைகளுக்கு ஏற்றதாக இருப்பது, எந்த அளவிலும் மிக பல பொது மக்களின் நலன்களை நிறைவு செய்வது, ஒரு கட்சியின் அடிப்படை இலக்குகளை வெளிப்படுத்தியுள்ளது. ஆட்சிப் புரிவதில் இக்கட்சி நனவாக்க வேண்டிய இலக்குகள், வாழ்க்கை தர வளர்ச்சி மீது பொது மக்களின் புதிய ஆசையாகும்" என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040