• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உயிரின வாழ்க்கைச் சூழல் கட்டுமானத்துக்கு சீனாவின் முயற்சிகள்
  2012-11-15 19:27:03  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் முன்மொழியப்பட்ட உயிரின வாழ்க்கைச் சூழல் கட்டுமானம் குறித்து, சர்வதேசச் சமூகம் கடந்த சில நாட்களாக ஆக்கமுடன் மதிப்பிட்டுள்ளது. சீனாவில் உயிரின வாழ்க்கைச் சூழல் கட்டுமானம் முதன்மை இடத்திலேயே வைக்கப்படுவது, மக்களுக்கு சிறந்த வாழ்க்கைச் சூழலை அளிப்பதாகவும், பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியை விரைவுபடுத்துவதாகவும் அமையும். அது, உலகின் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்கும் என்று கருதப்படுகிறது.

உயிரின வாழ்க்கைச் சூழல் கட்டுமானத்திலிருந்து சீனா பெரும் பயன் மற்றும் முன்னேற்றும் அடையும். இது, உலகின் பிற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று அமெரிக்காவின் உயிரின வாழ்க்கைச் சூழலுக்கான பொருளியலாளர் ஜான்.காப்பு தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பிரச்சினை, மக்களின் நலவாழ்வு மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடையது. 18வது தேசிய மாநாட்டில் உயிரின வாழ்க்கைச் சூழல் கட்டுமானம், முதன்மை இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் கடலோரப் பிரதேசங்களின் தோற்றம் மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று சீனப் விவகாரங்களுக்கான பிரான்ஸ் நிபுணர் ஏர்.பிகார் கருத்து தெரிவித்துளார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040