21வது ஆசியான் உச்சி மாநாடும் பல உச்சி மாநாடுகளும் 18 முதல் 20ஆம் நாள் வரை, கம்போடியாவின் தலைநகர் பினோம் பெனில் நடைபெற்றன. தென் சீனக் கடல் பற்றிய அறிக்கை ஒன்றைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்துவது, தென் சீனக் கடல் நடவடிக்கைக் கோட்பாட்டை விரைவில் முன்னேற்றுவது குறித்து விவாதிப்பது ஆகியவை இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளாகும். அமைதியான புரிந்துணர்வான அடிப்படையில் தென் சீனக் கடல் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்பட்டது. சீனா முன்வைத்த தென் சீனக் கடல் நடவடிக்கைகளின் கோட்பாடு பற்றிய பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும் விருப்பத்தைப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
ஐ.நாவின் கடல் சட்டப் பொது ஒப்பந்தத்தையும் தென் சீனக் கடல் பற்றிய பல்வேறு தரப்புகளின் நடவடிக்கை அறிக்கையையும் பல்வேறு நாடுகள் பின்பற்றி, சொந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, பல்வேறு தரப்புகளுக்குமிடையிலான கருத்து வேற்றுமையை ஆக்கப்பூர்வமாக தீர்க்குமாறு அகினோ அரசுத் தலைவர் வேண்டுகோள் விடுப்பதாக பிலிப்பைன் வெளியுறவு அமைச்சர் ஆல்பர்ட் டெல் ரொசாரியோ, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தென் சீனக் கடல் நடவடிக்கை கோட்பாடு பற்றிய பேச்சுவார்த்தையைச் சீனா ஊக்கத்துடன் முன்னேற்றியது. இதை ஆசியான் நாடுகள் உறுதிப்படுத்தின. தற்போது, உலக அமைப்பில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. பொருளாதார நெருக்கடி, சில பிரதேசங்களின் கொந்தளிப்பான நிலைமை ஆகியவற்றின் பின்னணியில், ஆசியா, குறிப்பாக ஆசியான் பிரதேசத்தின் நிலைமை, அமைதியாகவும் நிதானமாகவும் வளர்ந்து வருகின்றது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணைத் தலைவர் ஃபு யிங் தெரிவித்தார். ஒத்துழைப்பு, சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் முக்கிய நோக்கமாகும். மேலதிக நாடுகள், ஆசியாவின் அமைதி, நிதானம், செழுமை ஆகியவற்றிலிருந்து பயனடையும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ், இம்மாநாட்டில் கலந்து கொண்ட போது தெரிவித்தார். ஃபு யிங் கூறியதாவது தென் சீனக் கடல் பிரதேசத்தின் நெருக்கடி நிலைமையைத் தணிவு செய்வது அவசியம். தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து, இதே நிலைப்பாட்டைச் சீனா எப்போதும் நிலைநிறுத்தி வருகின்றது. தென் சீனக் கடல் பிரதேசத்தின் அமைதிக்கும் நிதானத்துக்கும் சீனா மாபெரும் முக்கியத்துவம் அளிக்கின்றது என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் கூறினார். பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தென் சீனக் கடல் பிரச்சினை பற்றிய பல்வேறு தரப்புகளின் நடவடிக்கைக் கோட்பாட்டைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்துவதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். தொடர்புடைய ஒத்தக் கருத்துக்களை உருவாக்குவதை விரைவுபடுத்த வேண்டும். முதிர்ச்சியடைந்த நிலைமையில், தென் சீனக் கடல் நடவடிக்கைக் கோட்பாடு பற்றிய பேச்சுவார்த்தையை முன்னேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.





அனுப்புதல்












