கடந்த சில ஆண்டுகளில், சீனா பல்வேறு தெற்காசிய நாடுகளுடன் மேற்கொண்ட பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பில் மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. 2000 முதல் 2011ஆம் ஆண்டு வரை, சீனா 8 தெற்காசிய நாடுகளுடான் மேற்கொண்ட மொத்த வர்த்தகத் தொகை 570 கோடியிலிருந்து 9 ஆயிரத்து 740 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்து, 16 மடங்கு அதிகரித்தது. இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், இரு தரப்பின் வர்த்தகத் தொகை சுமார் 7 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த ஆசிய தூதாண்மை அலுவர் வான் சீ ஹுய் அண்மையில் இதைத் தெரிவித்தார்.
சீனாவும் தெற்காசியாவும் ஒன்றுக்கு ஒன்று நலன்கள் தரும் பொருளாதார ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழமாக்குவது, இரு தரப்பின் பொருளாதார வர்த்தக உறவின் தனிச்சிறப்பாக மாறியுள்ளது. சீனாவும் பல்வேறு தெற்காசிய நாடுகளும் அடிப்படை வசதிகட்டுமானங்களில் ஒன்றுக்கொன்று முதலீடு செய்வதில் கொள்ளும் ஒத்துழைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் நல்ல சமூக மற்றும் பொருளாதாரப் பயன்களைப் பெற முடிகிறது என்று அவர் கூறினார்.