சீனாவின் பெருஞ்சுவர் தொழில்நிறுவனத்துடன் ஒத்துழைத்து, நாட்டின் முதல் தொலைத்தொடர்புச் செயற்கைக்கோளை, இலங்கை 27ஆம் நாள் விண்ணில் செலுத்தியது. இந்தச் செயற்கைக்கோள் செலுத்தல், இலங்கை தனியார் நிறுவனத்தின் திட்டப்பணியாகும். இலங்கைக்கு அகன்ற இணைய அலைவரிசை, ஒலிப்பரப்பு மற்றும் தொலைத்தொடர்புச் சேவையை, அது வழங்கும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதேவேளை, தெற்காசியா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு பிரதேசம், ஆஸ்திரேலியா ஆகிய பிரதேசங்களிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு, தொலைத்தொடர்பு சேவை புரிய, இச்செயற்கைக்கோள் பயன்படும்.
இதனால், உலகில் தொலைத்தொடர்புச் செயற்கைக்கோளைக் கொண்ட 45வது நாடாக இலங்கை மாறியுள்ளது. தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய மூன்றாவது நாடாகவும் இலங்கை திகழ்கிறது.