• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் 7வது பெய்ஜிங் பன்னாட்டுப் பண்பாடு மற்றும் புதாக்கத் தொழிற்துறைக் கண்காட்சி
  2012-12-20 09:37:58  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் 7வது பெய்ஜிங் பன்னாட்டுப் பண்பாடு மற்றும் புத்தாக்கத் தொழிற்துறைக் கண்காட்சி, டிசம்பர் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியுள்ளது. பண்பாட்டையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து, புத்தாக்கம் மூலம் வளர்ப்பது நடப்புக் கண்காட்சியின் தலைப்பாகும். சீன மற்றும் வெளிநாட்டுப் பண்பாட்டுத் துறைகளிலான ஒத்துழைப்பை இக்கண்காட்சி முன்னேற்றுவதாகச் சீனப் பண்பாட்டுத் துறை அமைச்சரும் இக்கண்காட்சிக்கான அமைப்புக் குழுவின் தலைவருமான சைவூ அதன் துவக்க விழாவில் தெரிவித்தார்.

6 சர்வதேச அமைப்புக்கள், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட 15 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 50க்கும் மேலான பிரதிநிதிக் குழுக்கள் 4 நாட்கள் நீடிக்கும் இக்கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.

அத்துடன், நடப்புக் கண்காட்சியின் போது, பண்பாட்டு அரங்கேற்றம், கேலிச்சித்திர விளையாட்டு, ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி முதலிய துறைகளில், 2000க்கும் அதிகமான சீன மற்றும் வெளிநாட்டுப் பண்பாட்டுப் புத்தாக்க நிறுவனங்கள் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்புக்களையும் மேற்கொள்ளும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040