• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைவர்களின் பயணம்
  2013-01-02 18:52:04  cri எழுத்தின் அளவு:  A A A   
2013ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் புதிய நிரந்தர உறுப்பினர்கள் பதவி ஏற்ற பிறகு வந்துள்ள முதலாவது புத்தாண்டு திருநாளாகும். அண்மையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷீ ச்சின்பிங், கட்சியின் மத்தியக் கமிட்டி அரசியல் குழு நிரந்தர உறுப்பினரும், துணை தலைமையமைச்சருமான லீ கெச்சியாங் கடும் பனிப் பொழிவையும் பொருட்படுத்தாமல் முறையே ஹர்பெய், சியாங் சி, ஹு பெய் உள்ளிட்ட பிரதேங்களுக்குச் சென்று, வறிய பொது மக்களைச் சந்தித்தனர். அரசியல் குழுவின் புதிய நிரந்தர உறுப்பினர்கள் பதவி ஏற்ற ஒன்றரை திங்களில், சீனச் சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளை எதிர்நோக்கி, சிக்கல்களையும், இன்னல்களையும் சமாளிக்கும் மனவுறுதியை அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உண்மையில் ஊன்றி நிற்கும் புதிய பாணி, சீன மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. புத்தாண்டில் எதிர்கால பார்வையோடு செயல்பட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைவர்கள் சீன மக்களுக்குத் தலைமை தாங்கி, மேலும் செவ்வனே முன்னேற்ற பாதையில் வழிநடத்த வேண்டும் என்று சீன மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷீ ச்சின்பிங் அண்மையில் ஹர்பெய் மாநிலத்தின் ஃபூ பிங் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டபோது, ஒரு குழந்தை அவருக்கு வணக்கம் தெரிவித்ததாகும். ஃபூ பிங் மாவட்டம், சீனாவின் மிகவும் வறுமையான பிரதேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள நபர்வாரி ஆண்டு வருமானம், 900 யுவான் மட்டுமே ஆகும். உள்ளூர் கிராமவாசிகளின் வீடுகளும், வீட்டு சாமான்களும் பழுதடைந்தவை. சீனாவின் மிக உண்மையான வறுமை நிலையை நேரில் காண வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் தமது அப்பயணத்தில் அடிக்கடி வலியுறுத்தினார்.

இதற்கிடையில், சியாங் சி மாநிலத்தின் சியு சியாங் பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தில், துணை தலைமையமைச்சர் லீ கெச்சியாங், விவசாய தொழிலாளர்கள் தங்கும் பழுதடைந்த அறையில், அத்தொழிலாளர்களின் தேவைகளைக் கேட்டறிந்துக் கொண்டிருந்தார். லீ கெச்சியாங் கூறியதாவது:

"எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. ஆனால் அதை நனவாக்க, அரசு கொள்கை வகுக்க வேண்டும். அரசு எந்த கொள்கையை வகுக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்?" என்று அவர் வினவினார்.

2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் புதிய தலைவர்கள், வறிய பொது மக்களை சந்தித்திருப்பது, சீனாவின் நடைமுறை வாழ்க்கையை அவர்கள் ஆழமாக புரிந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது என்று Lian He Zao Bao என்னும் சிங்கப்பூர் செய்தித்தாளின் மூத்த விமர்சகர் யூ ஹெய் சங் கருத்துத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"கட்சியின் புதிய தலைவர்கள் பயணம் மேற்கொண்ட இடங்கள், வறிய இடங்களாகும். முன்பு, இவ்விடங்கள், சீனாவின் புகழைச் சீர்குலைக்கக்கூடிய இடங்களாக கருதப்பட்டன. ஆனால் இத்தகைய இடங்களில் பயணம் மேற்கொள்வது, உண்மையான சீனச் சமூகத்தை அறிந்து கொள்வதற்காகும். சீன மக்களின் வறிய நிலைமையையும், அடிமட்ட மக்களின் வாழ்க்கை நிலைமையையும் அறிந்து கொள்வதற்கும் ஆகும்." என்று அவர் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு நடைபெற்ற பின் வரும் ஆண்டின் துவக்கமாகும். சீனாவின் புதிய அரசு உருவாக்கப்படயிருக்கும் துவக்க ஆண்டுமாகும். மேலும் அருமையான வாழ்க்கை நடத்தி, சீனச் சமூகம் மேலும் நன்றாகவும் விரைவாகவும் வளர்ச்சியடைய வேண்டும் என்று சீன மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040