• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் ஆடம்பரப் பொருட்களின் நுகர்வு
  2013-01-03 18:55:04  cri எழுத்தின் அளவு:  A A A   

 

அண்மையில் வெளியான ஓர் ஆய்வு அறிக்கையின்படி, தற்போது, உலகளவில் ஆரம்பரப் பொருட்களின் மிக பெரிய நுகர்வுக் குழுவினராக சீனர்கள் மாறியுள்ளனர். ஆடம்பரப் பொருட்களின் நுகர்வில் சீனர்கள் விவேகமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் முன்மொழிந்துள்ளனர்.

30 வயதான திரு ச்சாங் பெய்சிங் மாநகரைச் சேர்ந்தவர். பணியின் காரணமாக, தனது நிலையை உயர்த்திக்கொள்ள, ஆண்டுதோறும் அவர் சில ஆடம்பரப் பொருட்களை வாங்குகின்றார். அவர் கூறியதாவது:

"எனது வருமான நிலைக்கிணங்க, ஆண்டுதோறும் காலணிகள், ஆடைகள், ஒப்பனைப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குகிறேன். ஆடம்பரப் பொருட்களின் தரம் மற்றும் பாணி, சாதாரணப் பொருட்களின் தரம் மற்றும் பாணியை விட உயர்வாக இருக்கின்றன" என்று அவர் தெரிவித்தார்.

திரு ச்செங் வெளிநாடுகளில் அடிக்கடி பயணம் மேற்கொள்கிறார். அவர் பொதுவாக வெளிநாடுகளில் ஆடம்பரப் பொருட்களை வாங்குகிறார். அண்மையில் திரு ச்செங்கும் அவரது மனைவியும் இத்தாலிக்கு சென்று தேன்நிலவுக் காலத்தைக் கழித்தபோது, சில ஆடம்பரப் பொருட்களை வாங்கினர். திரு ச்செங் கூறியதாவது:

"எனக்கு நண்பர்கள் அதிகம். சில ஆடம்பரப் பொருட்களை வாங்குமாறு என்னை அவர்கள் கேட்டுக் கொண்டனர். Prada பைகள், தோல் காலணிகள் உள்ளிட்ட சில தோல் பொருட்களை வாங்கினோம். சீனாவில் இருப்பதை விட இத்தாலியில் ஆடம்பரப் பொருட்களின் விலை குறைவு" என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில், திரு ச்சாங் மற்றும் திரு ச்செங் போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்க விரும்பும் சீனர்கள் மென்மெலும் அதிகரித்துள்ளனர். உலகில் ஒரு புகழ்பெற்ற ஆலோசனை நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, தற்போது உலகளவில் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் மிக பெரிய நுகர்வு குழுவினராக சீனர்கள் மாறியுள்ளனர். உலகில் 25 விழுக்காடு ஆடம்பரப் பொருட்களை சீனர்கள் வாங்குகின்றனர். இது பற்றி ஆடம்பரப் பொருட்கள் நுகர்வுத் துறையின் நிபுணர் பான் சியு பேசுகையில், கடந்த பல ஆண்டுகளாக சீனப் பொருளாதாரம் உயர் வேக அதிகரிப்பை நிலைநிறுத்தும் வேளையில், சீனாவில் ஆடம்பரப் பொருட்கள் நுகர்வு அதிகரிப்பது இயல்பே என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"கடந்த பல ஆண்டுகளில், சீனப் பொருளாதாரம் உயர் வேகத்தில் அதிகரித்து வந்துள்ளது. சீன மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. ஆனால், வருமான பங்கீட்டில் சமமற்ற நிலைமை நிலவுகிறது. உயர் வருமானம் கொண்டுள்ள மக்கள் பெருமளவில் ஆடம்பரப் பொருட்களை வாங்குகின்றனர். நடுத்தர மற்றும் தாழ்வான வருமானம் கொண்டுள்ள மக்களும் ஆடம்பரப் பொருட்களின் நுகர்வில் கவனம் செலுத்துகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

ஆய்வு அறிக்கையின்படி, சீனாவில் அதிகமானோர் தத்தமது வருமானத்தில் 40 விழுக்காட்டுக்கு மேலான பணத்தை செலவழித்து ஆடம்பரப் பொருட்களை வாங்குகின்றனர். தவிர, சீனாவில் ஆடம்பரப் பொருட்களின் நுகர்வோரில் சுமார் 50 விழுக்காட்டினரின் வயது, 18 முதல் 34 வரையாகும். இந்த இளம் வயதுடைய குழுவினரில், சில பகுதியினர், போதிய நுகர்வு ஆற்றலைக் கொள்ளவில்லை.

தற்போது சீனாவின் பொருளாதார நிலை, பொதுவாக ஆடம்பரப் பொருட்களை வாங்கும் அளவை எட்டவில்லை. ஆடம்பரப் பொருட்களின் தொழில் சின்னப் பண்பாட்டை நுகர்வோர் ஆழமாக புரிந்து கொள்ளவில்லை. சீனாவின் ஆடம்பரப் பொருட்கள் நுகர்வு சந்தை பக்குவடையவில்லை. நுகர்வோர் கண்மூடித்தனமாக ஆடம்பரப் பொருட்களை வாங்கக் கூடாது என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040