• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்திலுள்ள மின்சாரப் பிரச்சினைத் தீர்வு
  2013-01-06 15:27:46  cri எழுத்தின் அளவு:  A A A   

இது வரை, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கோவை சூரிய வெப்ப ஆற்றல் மின்சார முறைமைகள் அடிப்படையாக கட்டியமைக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தின் 1630 கிராமங்களில் வாழ்கின்ற சுமார் 6 இலட்சத்து 90 ஆயிரம் மக்களுக்கான மின்சார வினியோகப் பிரச்சினை அடிப்படையில் தீர்க்கப்பட்டுள்ளது என்று சின்குவா செய்தி நிறுவனம் அறிவித்தது.


திபெத்தில் மின்சார வினியோகம் பெறாத இடங்களில் மின்சாரத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்த்து, மின்சார வசதிகளை மறுசீரமைத்து, 7 இலட்சத்து 70 ஆயிரம் மக்களுக்கான மின்சார வினியோகப் பிரச்சினையைக் கையாளும் வகையில், இத்தன்னாட்சிப் பிரதேச அரசும் நாட்டின் தொடர்புடைய வாரியங்களும் திபெத் முழுவதிலும் மின்சார வினியோகம் பற்றிய சூரிய வெப்ப ஆற்றல் திட்டப்பணியைச் சீராக நடைமுறைப்படுத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040