• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் மிகப் பெரிய அணு மின் நிலையத்தின் கட்டுமானம்
  2013-01-07 18:23:38  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவில் மிகப் பெரிய அணு மின் திட்டப்பணியான ஷிதாவ்வன் அணு உலை திட்டப்பணியின் கட்டுமானம் அண்மையில் துவங்கியுள்ளது. ஷான்தோங் மாநிலத்தில் அமைந்துள்ள ஷிதாவ்வன் அணு மின் நிலையம், உலகளவில் 4வது தலைமுறை அணு மின் தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக வணிகமயமாக்கும் முதலாவது மாதிரி திட்டப்பணியாகும். தற்போது முழு உலகிலும் மிக முன்னேறிய அணு மின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் இந்த நிலையம், பாதுகாப்பு துறையில் பிரச்சினைகளைச் சந்திக்காது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மொத்தம் சுமார் 10 ஆயிரம் கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்படும் ஷிதாவ்வன் அணு மின் நிலையத் திட்டப்பணி, 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் 66 இலட்சம் கிலோவாட் மின் ஆற்றல் உற்பத்தியை நனவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டப்பணியில் பயன்படுத்தப்படும் உயர்வெப்ப வளிமக் குளிர்விப்பு அணு உலையின் உற்பத்தி அளவு 2 இலட்சம் கிலோவாட் மட்டுமே என்பதால், அது சிறிய ரக அணு மின்னாக்கிகளாகும். சீன அணு ஆற்றல் ஆய்வகத்தின் பேராசிரியர் சோபெய்தே கூறியதாவது—

"பாதுகாப்பு துறையில், இந்த உயர்வெப்ப வளிமக் குளிர்விப்பு அணு உலை, 4வது தலைமுறை அணு மின் தொழில் நுட்ப வரையறையை எட்டியுள்ளது. இது இத்திட்டப்பணியின் மிகப் பெரிய தனிச்சிறப்பாகும். இந்த வரையறையை எட்டியுள்ளதால், அதன் பாதுகாப்பில் பிரச்சினைகள் ஏற்படப் போவதில்லை என கருதுகின்றேன்" என்று அவர் கூறினார்.

2011ஆம் ஆண்டு மார்ச் திங்கள் கடும் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஃபுகுசிம அணு மின் நிலையம் கசிந்து விபத்துக்குளானது. அதற்குப் பின், கட்டப்பட்டு வந்த அனைத்து அணு மின் நிலையத் திட்டப்பணிகளையும் சீன அரசு நிறுத்தியது. 2012ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள், அணு மின் தொழிலுக்கான புதிய திட்ட வரைவை சீனா வெளியிட்டு, புதிய அணு உலை திட்டப்பணி பற்றிய பரிசீலனை பணி மீட்கப்படும் என்றும் தெரிவித்தது. அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த கருத்து வேற்றுமை நிலவி வருகிறது. இது பற்றி சோபெய்தே கூறியதாவது—

"முதலில், அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அதற்கான கண்காணிப்பில் போதுமான முக்கியத்துவம் செலுத்த வேண்டும். இரண்டாவதாக, இயங்கும் முறை மற்றும் தொழில் நுட்பத்தை மேலும் மேம்படுத்த வேண்டும். பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அணு மின் நிலையத்தின் பாதுகாப்பை உயர்த்த வேண்டும். கடைசியாக, தொடரவல்ல அணு ஆற்றலை பெருமளவில் வளர்த்து, அணு எரிபொருட்களின் சுழற்சி தொழில் நுட்ப அமைப்பு முறையை உருவாக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

தற்போது, சீனாவில் 10க்கு மேற்பட்ட வணிக அணு உலைகள் இயங்கி வருகின்றன. அணு தொழிற்துறையின் வளர்ச்சித் திட்டத்தின்படி, எதிர்காலத்தில், கடற்கரைப் பிரதேசத்தில் 27 அணு உலைகள் கட்டப்படும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040