• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யூன்நான் மாநிலத்தில் மலைச் சரிவுக்குப் பின் மீட்புதவிப் பணி
  2013-01-13 16:53:46  cri எழுத்தின் அளவு:  A A A   
யூன் நான் மாநிலத்தின் ச்சென் சியோங் மாவடத்தில் ஜனவரி 11ஆம் நாள் மலைச் சரிவு நிகழ்ந்த பின் மீட்புதவிப் பணி 2 நாட்கள் நீடித்துள்ளது. புதைக்கப்பட்ட 46 உயிரிழந்தோரின் பூதவுடல்கள் அனைத்தும் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை, நிவாரண மற்றும் புனரமைப்பு பணி, பணியின் மையமாக மாறியுள்ளன.

11ஆம் நாள் பிற்பகல், யூன் நான் மாநிலத்தின் ச்சென் சியோங் மாவட்டத்தில் கடுமையான மலைச் சரிவு நிகழ்ந்தது. அதில் 46 பேர் புதைக்கப்பட்டனர். 2 பேர் காயமுற்றனர். வீடு, போக்குவரத்து, நீர் சேமிப்புவசதி, தொலை தொடர்பு, மின்சாரம் விநியோகம் முதலியவற்றுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்துக்குப் பின், மீட்புதவி பணி மேற்கொள்ள, அரசவை பணிக்குழு ஒன்றை ச்சென் சியோங்க்கு அனுப்பியுள்ளது.

ச்சென் சியோங் மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டாமல் தவிர்க்க, 1 கோடியே 10 லட்சம் யுவான் அவசர உதவித் தொகையை யூன்நான் மாநில அரசு ஒதுக்கியுள்ளது. அத்துடன், கூடாரம், போர்வை, பஞ்சு ஆடை, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத பொருட்கள் முதலியவற்றையும் யூன்நான் மாநிலம் ச்சென் சியோங்க்கு அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040