• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதுப்பிக்கவல்ல எரியாற்றல்அமைப்பில் சேர விண்ணப்பம்
  2013-01-14 09:43:02  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டுக்குள் சர்வதேச புதுப்பிக்கவல்ல எரியாற்றல் அமைப்பில் சேர சீனா திட்டமிட்டுள்ளது. எரியாற்றல் பயன்பாட்டுத் தொழில் நுட்பத் துறையில் பன்னாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலமாக, உலக அளவில் உருவாகும் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் சந்தையை முன்னேற்ற சீனா பாடுபடும். சர்வதேச புதுப்பிக்கவல்ல எரியாற்றல் அமைப்பின் 3வது முழு அமர்வில், சீனப் பிரதிநிதிக் குழு 13ஆம் நாள் இதை அறிவித்தது.

சீனத் தேசிய எரியாற்றல் ஆணையத்தின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் பிரிவின் துணைத் தலைவர் ஸி லீ ஷான் செய்தியாளரிடம் பேசுகையில், எரியாற்றல் சிக்கனம் மற்றும் கரி வெளியேற்றக் குறைப்பு, புதிய எரியாற்றல் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் அதிக கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பயனுள்ள சாதனைகளை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வளர்ப்பதில் பெற்றுள்ள சாதனைகளை சீனா உலகிற்கு வெளிப்படுத்தி, அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டு, ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040