• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டு வர்த்தகத்தில் சீனாவின் இலக்கு
  2013-01-16 16:24:06  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டுச் சந்தைத் தேவை எதிர்பாராததாக தாழ்வாக இருந்தது. 2013ஆம் ஆண்டும், சீனாவின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை தொடர்ந்து சிக்கலை நோக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தின் அதிகரிப்பு வேகம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு வேகத்தைப் போல் இருப்பது, சர்வதேச வர்த்தகத்திலுள்ள பங்குகளை மேலும் உறுதிப்படுத்தி, விரிவாக்குவது ஆகியவை 2013ஆம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் குறிக்கோள்களாகும். சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சென் தான் யாங் ஜனவரி 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

2012ஆம் ஆண்டு, சீனாவின் மொத்த வெளிநாட்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்பு 3 லட்சத்து 86 ஆயிரத்து 6 நூற்று 76 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 6.2 விழுக்காடு அதிகமாகும் என்று சுங்கத் துறை வெளியிட்ட கடைசி புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

2012ஆம் ஆண்டு உலகளவில் வர்த்தக அதிகரிப்பு சுமார் 2.5 விழுக்காடாக மட்டும் இருக்கும் நிலையில், உலகின் முக்கியப் பொருளாதார நாடுகளில் சீனாவின் இச்சாதனை மிகச் சிறந்ததே என்று சென் தான் யாங் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040