• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல் தொழில் நுட்ப அடிப்படை வசதிக் கட்டுமானம்
  2013-01-17 09:12:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் தேசியளவிலான முக்கிய அறிவியல் தொழில் நுட்ப அடிப்படை வசதிக் கட்டுமானத்தின் இடைக்கால மற்றும் நீண்டக்கால வரைவுத் திட்டம், அரசவையின் வாரக் கூட்டத்தில் 16ஆம் நாளன்று விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு சீனாவில் முக்கியமான அறிவியல் தொழில் நுட்ப அடிப்படை வசதிகளின் வளர்ச்சித் திசையும், 12வது ஐந்தாண்டுக்காலக் கட்டுமானத்தின் முக்கிய பணிகளும் அதில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த 20 ஆண்டுகளில், புத்தாக்க திறனின் தோற்றுவானை உயர்த்துவது, முக்கிய அறிவியல் நுட்பங்களின் முன்னேற்றத்தையும் சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் ஆதரிப்பது ஆகியவற்றை சீனா முக்கிய இலக்குகளாக கொள்ளும் என்று வகுக்கப்பட்டுள்ளது.

எரியாற்றல், உயிர், புவி அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல், மூலப்பொருள், துகள் மற்றும் அணுகரு இயற்பியல், வின்வெளி மற்றும் வானியல், பொறியியல் தொழில் நுட்பம் ஆகிய 7 துறைகளை அடிப்படையாக கொண்டு, சீனா அடிப்படை வசதிக் கட்டுமானங்களை விரைவுப்படுத்தும் என்று இந்த வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040